மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய சிறுவன் கைது
x

திருவண்ணாமலையில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய வேலூரை சேர்ந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அவ்வப்போது திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மோட்டார் சைக்கிள்கள் திருடியது வேலூர் பகுதியை சேர்ந்த வயது 18 சிறுவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்து, அவனிடம் இருந்து 15 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.


Next Story