பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
குடியாத்தம் செருவங்கி புதுதெரு பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் இவரது மகன் பிரதீப் (வயது 22) வெல்டிங் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் 16 வயதான மாணவியை காதலித்து வந்தார. மாணவியிடம் திருமண ஆசைகாட்டி வாலிபர் பிரதீப் நெருக்கமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதனையடுத்து மாணவியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்ததில் மாணவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தீவிரமாக விசாரிததபோது வாலிபர் பிரதீப் ஆசை வார்த்தைகள் கூறி நெருக்கமாக இருந்ததாக கூறி உள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்கள் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீ்ஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா ஆகியோர் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீபை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.