விஷம் தின்று சிறுவன் தற்கொலை
விஷம் தின்று சிறுவன் தற்கொலை செய்து கொண்டான்.
முசிறியை அடுத்த தண்டலைப்புத்தூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 42). இவரது மகன் கோபிராஜ்(16). சம்பவத்தன்று இவர் சோளக்காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது பாட்டி, நேரம் ஆகியும் ஏன் ஆடுகளை பட்டியில் அடைக்காமல் மேய்த்துக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் வீட்டிற்கு சென்ற கோபிராஜ், சோளக்காட்டிற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) சாப்பாட்டில் கலந்து தின்றுள்ளார். பின்னர் இது பற்றி தனது தம்பியிடம் கூறியுள்ளார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கோபிராஜை முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து, கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் முசிறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.