சிறுவன் விஷம் குடித்து தற்கொலை
உவரி அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க மறுத்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திசையன்விளை:
உவரி அருகே மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க மறுத்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
14 வயது சிறுவன்
நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள வெம்மணங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுயம்பு. இவருக்கு 5 மகள்களும், இசக்கிமுத்து (வயது 14) என்ற மகனும் இருந்தனர்.
இசக்கிமுத்து 7-ம் வகுப்பு வரை படித்து உள்ளார். அவர் தனது தந்தையிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டார். அதற்கு அவர், தற்போது மோட்டார் சைக்கிள் வாங்க பணம் இல்லை. பின்னர் வாங்கி தருகிறேன் என்று கூறினார்.
தற்கொலை
இதனால் மனவேதனை அடைந்த இசக்கிமுத்து சம்பவத்தன்று முருங்கைக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இசக்கிமுத்து பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுக்க மறுத்ததால் சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.