பொங்கல் விளையாட்டு போட்டியில் மயங்கி விழுந்த சிறுவன் சாவு
திருப்பனந்தாள் அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில் மயங்கி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
திருப்பனந்தாள்;
திருப்பனந்தாள் அருகே பொங்கல் விளையாட்டு போட்டியில் மயங்கி விழுந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
பொங்கல் விளையாட்டு போட்டிகள்
தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே உள்ள சோழபுரம், மானம்பாடி மேலத்தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன். இவருடைய மனைவி சந்திரா. இவர்களுடைய மகன் நித்திஷ்(வயது 13).சம்பவத்தன்று சோழபுரம் பகுதியில் பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் நித்திஷ் சைக்கிள் போட்டி மற்றும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து ெகாண்டான். இதன் பின் சிறிது நேரம் கழித்து பலூன் உடைக்கும் போட்டி நடந்தது. இந்த போட்டியை நித்திஷ் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தான்.
பரிதாப சாவு
அப்போது அவன் திடீரென மயங்கி விழுந்தான். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் நித்தீசை மீட்டு சிகிச்சைக்காக சோழபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் நித்தீஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நித்தீஷ் பரிதாபமாக உயிரிழந்தான்.இது குறித்து சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நித்தீஷ் அங்கு உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அவனது தந்தை அறிவழகன், துபாயில் பணியாற்றி வருகிறார்.