துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலி
துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலியானான். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து சிறுவன் பலியானான். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் கவிழ்ந்தது
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 37). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி பிரியங்கா (27). இந்த தம்பதியினர் மகன் பிரதீஷ் (7), உறவினர்கள் பாண்டியம்மாள் (39), சுபாஷ் (23) ஆகியோர் ஒரு காரில் மதுரையில் இருந்து மேல்மருவத்்தூருக்கு வந்து கொண்டிருந்தனர்.
காரை பால்பாண்டி ஓட்டி வந்தார். கார் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள யாகபுரம் பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.
சாவு
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அனைவரையும் அப்பகுதியினர் மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பிரதீஷ் செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த டிரைவர் உள்பட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.