உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் தவறி விழுந்த சிறுவன் சாவு குளிக்க சென்றபோது பரிதாபம்


உளுந்தூர்பேட்டை அருகே  ஏரியில் தவறி விழுந்த சிறுவன் சாவு  குளிக்க சென்றபோது பரிதாபம்
x

உளுந்தூர்பேட்டை அருகே குளிக்க சென்றபோது ஏரியில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பெரியசெவலை கிராமத்தை சேர்ந்தவர் சீனு. இவருடைய மகன் சிம்பு (வயது 15). இவன் கடந்த சிலநாட்களுக்கு முன்பு உளுந்தூர்பேட்டை அடுத்த கொரட்டூர் குச்சிபாளையம் கிராமத்தில் வசிக்கும் தனது அக்காள் விஜயலட்சுமி வீட்டிற்கு சென்று, அங்கு தங்கியிருந்தான். சம்பவத்தன்று சிம்பு அருகில் உள்ள சிறுவர்களுடன் குளிப்பதற்காக அதேஊரில் உள்ள ஏரிக்கு சென்றான். பின்னர் ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்த அவன் எதிர்பாராதவிதமாக திடீரென தவறி ஏரியில் விழுந்து தண்ணீரில் மூழ்கினான்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்ற சிறுவர்கள் சிம்புவை காப்பாற்றக்கோரி கூச்சலிட்டனர். இதைகேட்ட அக்கம் பக்கத்தில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து சிம்புவை பிணமாக மீட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிம்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குளிக்கச் சென்ற சிறுவன் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story