மின்சாரம் தாக்கி சிறுவன் பலி


மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
x

மின்சாரம் தாக்கி சிறுவன் பலியானான்.

சேலம்

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 30), கூலித் தொழிலாளி. இவருக்கு நித்திய பிரியா என்கிற மனைவியும், ஆதீஷ், சூரியகுமார் ஆகிய 2 மகன்களும் இருந்தனர். இவர்களில் ஆதீஷ் வாழப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் உள்ளவர்கள் அருகில் உள்ள துக்க நிகழ்ச்சிக்காக சென்றபோது ஆதீஷ் வீட்டில் இருந்து சுவிட்ச் பெட்டியில் கை வைத்துள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story