ஆற்றில் மூழ்கி சிறுவன் சாவு
ஆற்றில் மூழ்கி சிறுவன் இறந்தார்.
திருவாரூர்
கும்பகோணம் அருகே உள்ள அய்யாவாடி நேரு நகரை சேர்ந்தவர் எக்ஸ்பர்ட் ஞானதுரை. இவருடைய மகன் விஜய் (வயது13). 7-ம் வகுப்பு படித்து வந்தான். பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கூந்தலூர் திருமாஞ்சோலை தெருவில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்திருந்த விஜய், நேற்று முன்தினம் காணும் பொங்கல் அன்று மாலை தனது நண்பர்களுடன் அங்கு உள்ள அரசலாற்றில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கினான். இதனால் பதறிப்போன நண்பர்கள் கூச்சல் போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிச்சென்று ஆற்றில் இருந்து விஜயை மீட்டு எரவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது விஜய் இறந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து எரவாஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story