காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் புகார்
காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் புகார் அளித்தார்.
சென்னை
சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் பகுதி நேர ஊழியராக பணி செய்து வருகிறார். இவர் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தன்னிடம் வாலிபர் ஒருவர், முகநூல் வாயிலாக பழகி, காதலித்தார் என்றும், தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி, குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டு தற்போது வரும் 17-ந் தேதி இன்னொரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறார். அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வில்லிவாக்கம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story