சிறுவர், சிறுமியர் பாலார் மன்ற விழா


சிறுவர், சிறுமியர் பாலார் மன்ற விழா
x

சிறுவர், சிறுமியர் பாலார் மன்ற விழாவில் டி.ஐ.ஜி. கலந்து கொண்டார்.

வேலூர்

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை காவல்துறை சார்பில் சிறுவர் சிறுமியர் பாலார் மன்றம் விழா நடந்தது. துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி பேசினார். இதில் வேலூர், பாகாயம், காட்பாடி, குடியாத்தம், லத்தேரி ஆகிய பகுதிகளில் இருந்து சிறுவர் சிறுமியர் பாலார் மன்றத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், பாலார் மன்ற ஆசிரியர்கள், இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் ஆசிரியர் மகேஷ் நன்றி கூறினார்.

1 More update

Next Story