பொள்ளாச்சி அருகேபள்ளி சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள்-தட்டிக்கேட்ட ஆசிரியையுடன் வாக்குவாதம்


பொள்ளாச்சி அருகேபள்ளி சிறுமியிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள்-தட்டிக்கேட்ட ஆசிரியையுடன் வாக்குவாதம்
x
தினத்தந்தி 11 Feb 2023 12:15 AM IST (Updated: 11 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே பள்ளி சிறுமியிடம் சில்மிஷத்தில் 2 வாலிபர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆசிரியை தட்டி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே பள்ளி சிறுமியிடம் சில்மிஷத்தில் 2 வாலிபர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆசிரியை தட்டி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

7 வயது சிறுமி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று பள்ளியில் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தது. ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் பள்ளியின் அருகில் நடந்து சென்றனர்.

அப்போது ஜன்னல் ஓரத்தில் இருந்த 2-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியின் கன்னத்தை பிடித்து கிள்ளியதோடு சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதை பார்த்த ஆசிரியை உடனடியாக வெளியே வந்து அந்த 2 பேரையும் எச்சரித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் ஆசிரியையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

மேலும் அவர்கள் தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதற்குள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பள்ளியில் தகராறில் ஈடுபட்ட நபர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இதுவரைக்கும் எந்த புகாரும் வரவில்லை என்றனர்.



Next Story