அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்


அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்
x

அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தினமும் இரவு அன்னவாகனம், சிம்மவாகனம், ஆஞ்சநேயர் வாகனம், ஆதிசேஷ வாகனம், கருடாழ்வார் வாகனம், யானை வாகனம், புன்னைமர வாகனம், வெள்ளிக்குதிரை வாகனம், பல்லாக்கு வாகனம், தோழிக்கினியான் வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 31-ந் தேதி 8-ம் திருவிழாவில் சிறப்பெடுத்தல் நிகழ்ச்சியும், 2-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.

1 More update

Next Story