பிரம்மோற்சவம்-திருக்கல்யாணம்


பிரம்மோற்சவம்-திருக்கல்யாணம்
x

சீதா லக்ஷ்மண அனுமன் சமேத ராமநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்-திருக்கல்யாணம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், கோடாலி கருப்பூர் கிராமத்தில் உள்ள சீதா லக்ஷ்மண அனுமன் சமேத ராமநாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக சீதா தேவி சமேத ராமநாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையொட்டி ராம நாராயண பெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க சீதா தேவிக்கு மாங்கல்யதாரணம் நடைபெற்றது. பின்னர் மங்கள ஆரத்தி செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தில் வருகிற 9-ந் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.


Next Story