ரெயில் நிலையத்தில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு உதவ பிரெய்லி வரைபடம்


ரெயில் நிலையத்தில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு உதவ பிரெய்லி வரைபடம்
x

ரெயில் நிலையத்தில் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு உதவ பிரெய்லி வரைபடம் வைக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி கோட்டத்தில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பிரெய்லி வரைபடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி ரெயில் நிலையத்தில் நடைமேடை, படிக்கட்டுகள், டிக்கெட் விற்பனை மையம், வெளியேறும் பகுதி போன்ற பகுதிகளுக்கு எப்படி செல்வது என்பதை அறிந்து கொள்ளலாம். ரெயில் நிலையத்தின் நடைமேடை உள்பட ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து வசதிகளை இந்த பிரெய்லி வரைபடம் மூலமாக பார்வை குறைபாடு உடையவர்கள் அறியலாம். இந்த வரைபடம், பார்வை குறைபாடுள்ள பயணிகள், மற்றவர்களின் உதவி இல்லாமல் தாங்களே ரெயில் நிலையத்துக்குள் தேவைப்படும் இடங்களுக்கு சென்று வர பயனுள்ளதாக இருக்கும். இதைத்தவிர, இந்த பிரெய்லி வரைபடத்தின் அருகில் கியூஆர் கோடு கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை ஸ்மார்ட்போனில் ஸ்கேன் செய்து தகவல்களை ஒலிக்க செய்து, போக விரும்பும் இடத்தின் வழியை தெரிந்து கொள்ளலாம். பார்வை குறைபாடு உடையவர்களுக்கு, நடைமேடைகளை பாதுகாப்பான இடமாக மாற்ற, நடைமேடைகளின் ஓரத்தில் தொட்டுணரும்படியான டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. விரைவில் தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம் ரெயில் நிலையங்களில் அமைக்கப்பட இருப்பதாக திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story