ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பூத்தது


ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்   பிரம்ம கமலம்  பூ பூத்தது
x
திருப்பூர்

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும்

பிரம்ம கமலம் பூ பூத்தது

பிரம்மனின் நாபிக்கமலத்திலிருந்து வந்ததாக சித்தர்கள் வழிபட்டதால் இந்த பூவுக்கு பிரம்ம கமலம் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த பூ பூத்திருக்கும் போது அதன் முன் நின்று என்ன வேண்டினாலும் அது நடக்கும் என்பது ஒரு சிலரின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் வீடுகளில் வளர்க்கப்பட்டாலும் இந்த பூ பூக்கும்போது அதற்கு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பூக்கும் இந்த பூவின் வாசனை அனைவரையும் கவர்வதாக இருக்கும்.நள்ளிரவில் வெள்ளை நிறத்தில் பூக்கும் இதன் மலர்கள் விடிவதற்குள் வாடி விடும். அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும். இந்த தாவரத்தின் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

 மேலும் சளி, இருமல், காய்ச்சல், கல்லீரல் அழற்சி, சிறுநீர்ப்பாதை தொற்றுகள், புண்கள், நரம்புக்கோளாறுகள் மற்றும் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. கள்ளி வகையைச்சேர்ந்த பிரம்ம கமலத்தின் இலைகளை நட்டு வைத்தாலே வளர்ந்து விடும் தன்மை கொண்டது.தற்போது உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் பலரது வீடுகளில் இந்த பிரம்ம கமலம் வளர்க்கப்படுகிறது. அந்த வகையில் துங்காவி பகுதியில் நடராஜன் என்பவரது வீட்டில் அபூர்வமான பிரம்ம கமலம் பூக்கள் பூத்திருந்தது. அதனை ஏராளமானவர்கள் கண்டு ரசித்ததுடன் இந்த பூக்களுக்கு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.


Next Story