வீட்டின் ஓட்டை பிரித்து திருட்டு
சேலம்
அன்னதானப்பட்டி:-
சேலம் தாதகாப்பட்டி சண்முகநகரைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 24-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் வீடு திரும்பிய போது, ஓடுகள் பிரிக்கப்பட்டு சேதமடைந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள், துணிமணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. வீட்டின் ஓடுகளை பிரித்து உள்ளே இறங்கி அங்கிருந்து ரூ.20 ஆயிரம், லேப்-டாப், 2 செல்போன்கள், துணிமணிகள் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story