வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை உடைத்து 7 பவுன் நகை, பணம் கொள்ளை


வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை உடைத்து 7 பவுன் நகை, பணம் கொள்ளை
x

பாணாவரம் அருகே வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம்

பாணாவரம் அருகே வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா் பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றார்.

கதவு தாழ்ப்பாள் உடைப்பு

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகில் உள்ள லட்சுமிபுரம் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்தவர் சேட்டு (வயது 48), விவசாயி. இவருடைய மனைவி சுதா (38). இருவரும் காற்றுக்காக வீட்டின் வெளியே படுத்துத்தூங்கினர்.

அதிகாலை 2.30 மணியளவில் வீட்டின் பின்பக்க கதவு தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா் பீரோவில் வைத்திருந்த தங்கச் சங்கிலி, பிரேஸ்லெட், கம்மல், மோதிரம் என 7 பவுன் நகைகள் மற்றும் தனது விவசாய நிலத்தில் விளைந்த மிளகாயை விற்று வீட்டில் வைத்திருந்த ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டார்.

வீட்டில் இருந்த ஒரு சூட்கேஸ் ெபட்டியை தூக்கி சென்ற மர்மநபர், அங்குள்ள தோட்டத்தில் வைத்து திறந்து, அதில் ஏதேனும் நகை, பணம் இருக்கிறதா? எனப் பார்த்து விட்டு, பெட்டியை அங்கேயே போட்டு விட்டுச் சென்றுள்ளார்.

அரைக்கால் சட்டை அணிந்த மர்மநபர்

மேலும் அதே தெருவில் வசிக்கும் ஜெயபிரகாஷின் வீட்டின் பின்பக்க கதவை யாரோ திறப்பதுபோல் சத்தம் கேட்டுள்ளது. அவரின் தந்தை சம்பத் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார். அப்போது கருப்பு நிறத்தில் மா்மநபா் ஒருவர் அரைக்கால் சட்டை அணிந்து கொண்டு பீரோவின் அருகில் பதுங்கியிருந்ததைப் பார்த்து விட்டு திருடன்.. திருடன்.. எனச் கூச்சலிட்டு அலறினார்.

அவரின் கூச்சல் சத்தத்தைக் கேட்டதும் மா்மநபா் வீட்டில் இருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். அவரின் சத்தத்தைக் கேட்டு குடும்பத்தினரும் எழுந்தனர். அவர்கள், தகவலை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ஜெயபிரகாஷின் வீட்டில் திருட்டுப் போகவில்லை, எனக் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து பாணாவரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர் செல்வி வரவழைக்கப்பட்டார். அவர், கொள்ளை நடந்த வீட்டில் கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தார். மேற்கண்ட கொள்ளை சம்பவம் தொடர்பாக பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story