உண்டியலை உடைத்து பணம் திருட்டு


உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 6 July 2023 12:15 AM IST (Updated: 6 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உண்டியலை உடைத்து பணம் திருட்டு திருடப்பட்டது

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் சிவகங்கை-மதுரை ரோடு சந்திப்பில் அண்ணா சிலை பின்புறம் வல்லவ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து காணிக்கையை உண்டியலில் செலுத்துவார்கள். இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் புகுந்து அங்கு இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். நேற்று காலை சுவாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் சிலர் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் இந்த திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story