கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு


கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருட்டு
x

கடையின் மேற்கூரையை உடைத்து பணம் திருடியவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை

வாடிப்பட்டி,

வாடிப்பட்டி வார சந்தை பின்புறம் போடிநாயக்கன்பட்டி சாலையில் ஸ்ரீதர் என்பவர் பல்பொருள் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கடையை வழக்கம்போல் பூட்டி விட்டு சென்றார். அதன்பின் நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் சிமெண்ட் மேற்கூரை உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.72 ஆயிரத்தை காணவில்லை. யாரோ திருடி சென்று இருக்கிறார்கள். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story