கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
அணைக்கட்டு அருகே மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர்.
வேலூர்
அணைக்கட்டு அடுத்த ஏரிப்புதூர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டி காலபைரவர் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்த கோவிலில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, கோவிலில் உள்ள உண்டியல் மட்டும் பீரோக்களை உடைத்து, அதிலிருந்த ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.
காலையில் வழக்கம் போல் கோவிலுக்கு சென்ற பூசாரி, கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஏரிப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா வெங்கடேசன் அணைக்கட்டு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் இதே போல் ஏற்கனவே ஒரு முறை திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story