கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

குடியாத்தம் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள் சிலையையும் சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

வேலூர்

பணம் திருட்டு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த அம்மணாங்குப்பம் கிராமத்தில் ஆர்.எம்.பி. நகரில் குரு ராகவேந்திரா சுவாமி பிருந்தாவனம் கோவில் உள்ளது. நேற்று மாலையில் ராகவேந்திரா சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் வந்துள்ளனர். அப்போது கோவிலின் நுழைவாயிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலையின் வலது கை சேதப்படுத்தப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சடைந்துள்ளனர்.

உள்ளே சென்று பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறி இருந்தது. உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணமும் திருடப்பட்டு இருந்தது.

போலீஸ் விசாரணை

இந்த சம்பவம் குறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார், கோவில் நிர்வாகிகள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இருக்கும் இந்த கோவிலில் மர்ம நபர்கள் ஆஞ்சநேயர் சிலையை சேதப்படுத்தி, உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story