கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x

திசையன்விளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே நாடார் அச்சம்பாடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்மநபர் ஒருவர், கோவில் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள இரண்டு உண்டியல்களை உடைத்து சுமார் 10 ஆயிரம் பணத்தை திருடி சென்றுவிட்டதாக கோவில் நிர்வாகி செல்வசேகர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார். நெல்லையில் இருந்து கைரேகை பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமணி ராஜ் நேரில் வந்து கைரேகைகளை பதிவு செய்தார்.


Next Story