கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
வந்தவாசி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
வந்தவாசி
வந்தவாசி அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மன்னார்சாமி கோவில்
வந்தவாசியை அடுத்த மும்முனி பைபாஸ் ரோட்டில் பச்சையம்மன் மன்னார்சாமி கோவில் உள்ளது.
இங்கு சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
இந்த கோவிலில் பூசாரியாக சண்முகம் என்பவர் உள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டுச் சென்றார்.
உண்டியலை உடைத்து திருட்டு
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கோவிலின் பக்கவாட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தையும், நகைகளையும் திருடி சென்றுள்ளனர்.
இன்று காலை கோவிலை திறப்பதற்காக பூசாரி சண்முகம் வந்தார். அப்போது கோவிலின் பக்கவாட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை திருட்டு போய் இருந்தது.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை ேதடி வருகின்றனர்.