அத்திக்கடவு குடிநீர் குழாயில் உடைப்பு
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் அத்திக்கடவு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
பெ.நா.பாளையம்
மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணையில் இருந்து அத்திக்கடவு குடிநீர் திட்டம் மூலம் கோவை மாநகருக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கான குழாய்கள் ேகாவை-மேட்டுப்பாளையம் சாலையில் பதிக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால பணிகள் நடந்து வருகிறது. அங்கு பெரிய தூண் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்தநிலையில் நேற்று குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதில் இருந்து 20 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீறிட்டு வீணாக சென்றது. மேலும் பாலம் கட்டுவதற்காக அமைக்கப்பட்ட குழியில் தண்ணீர் தேங்கியதோடு, கழிவுநீர் கால்வாயில் கலந்து ஓடியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அத்திக்கடவு குடிநீர் திட்ட குழாயில் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இருப்பினும், 2 மணி நேரத்திற்கு மேல் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறியது. மேலும் குழாயை சீரமைக்கும் பணியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.