குடிநீர் குழாயில் உடைப்பு 100 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பு


குடிநீர் குழாயில் உடைப்பு 100 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பு
x
தினத்தந்தி 28 Sept 2022 12:13 AM IST (Updated: 28 Sept 2022 10:26 AM IST)
t-max-icont-min-icon

கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

கரூர்

கரூர் மாவட்டம், மாயனூரில் இருந்து மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், மேலூர், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் கூட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று இந்த குழாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றன.

அப்போது மாயனூர் ரெயில்வே கேட்டு அருகே திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 100 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்தது. இதனால் அப்பகுதியில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் ஆறுபோல் ஓடி வீணாகியது. பின்னர் உடைப்பு சரிசெய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story