அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம்


அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம்
x

அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம்

திருச்சி

தொட்டியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காடுவெட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த முதல்-அமைச்சரின் காலை உணவுதிட்ட தொடக்க விழாவுக்கு காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் அவர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து காலை சிற்றுண்டியை சாப்பிட்டார். நிகழ்ச்சியில் முசிறி கோட்டாட்சியர் ராஜன், ஒன்றிய செயலாளர் திருஞானம், ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி, துணை தலைவர் சத்தியமூர்த்தி, தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, காட்டுப்புத்தூர் பேரூராட்சி துணைத்தலைவர் சுதாசிவசெல்வராஜ், ஆணையர்கள் ஞானமணி, சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தொட்டியம் அருகே உள்ள அரங்கூர் கிராமத்தில் இருந்து தொட்டியத்துக்கு காலை மற்றும் மாலைநேரத்தில் பள்ளி மாணவ-மாணவிகளின் நலன் கருதி பஸ் போக்குவரத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பஸ்சில் ஏறி பயணிகளுடன் அமர்ந்து டிக்கெட் எடுத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்தார்.


Next Story