அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
பேரையூர், அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் நேற்று முதல் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
பேரையூர்
பேரையூர், அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் நேற்று முதல் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.
சீமானூத்து
உசிலம்பட்டி அருகே உள்ள சீமானூத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. விழாவிற்கு சீமானூத்து ஊராட்சி மன்ற தலைவர் அஜித் பாண்டி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ரம்யா, ஆணையாளர்கள் தங்கவேலு, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் உசிலம்பட்டி எம்.எல்.ஏ.அய்யப்பன், யூனியன் சேர்மன் ரஞ்சனி சுதந்திரம், உதவி திட்ட அலுவலர் பாரதிதாசன், ஒன்றிய அவைத்தலைவர் பெத்தண்ணன் மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பேரையூர்
பேரையூர் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தினை பேரூராட்சி தலைவர் குருசாமி தொடங்கி வைத்தார் .பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ஜெயதாரா, துணைத்தலைவர் பிரியதர்ஷினி, வருசை முகமது, தலைமை ஆசிரியர் சென்னம்மாள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் தேவன்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சி தலைவர் முத்து கணேசன் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் பாண்டிமுருகன், தலைமை ஆசிரியர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் பேரூராட்சி பகுதியில், அலங்காநல்லூர், வலசை, உள்பட 4 அரசு பள்ளிகளில் சுமார் 575 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. பேரூராட்சியின் தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் ஜுலான் பானு, தி.மு.க. நகர் செயலாளர் ரகுபதி, துணைத்தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், கல்வி துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பாலமேடு பேரூராட்சியில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் சுமதிபாண்டியராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, துணை தலைவர் ராமராஜ், ஒருங்கிணைப்பாளர் பிச்சை, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாலமேடு உள்பட 4 அரசு பள்ளிகளில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு உணவு அருந்தினர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க. நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன், அவை தலைவர் தங்கம் மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.