மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடக்கம்
மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
புள்ளம்பாடி ஒன்றியம்
புள்ளம்பாடி ஒன்றியம் நெய்க்குளம் ஊராட்சி நெடுங்கூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்க விழா ஒன்றிய குழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ.மாணவர்களுடன் உணவு அருந்தினார்.
விழாவில் ஊராட்சிமன்ற தலைவர் உமாராணிஅசோகன், துணைத்தலைவர் பாக்கியராஜ், ஒன்றியகவுன்சிலர்கள் கண்ணன், சுதாபெரியசாமி, செயலாளர் நெடுங்கூர் கனகராஜ், துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் கண்ணுசாமி நன்றி கூறினார்.
கல்லக்குடி
கல்லக்குடி பேரூராட்சி ஆதிதிராவிடர் அரசு தொடக்கப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார்.பேரூராட்சி துணைத்தலைவர் மோகன், வார்டுகவுன்சிலர் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேரூராட்சி தலைவர் பால்துரை கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கி, மாணவர்களோடு ் உணவருந்தினார். இதில் பேரூராட்சி அலுவலர்கள், ஆசிரியர்கள், தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முசிறி
முசிறியில் உள்ள திருச்சி ரோட்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த . நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் கலைச்செல்வி சிவக்குமார், துணைத் தலைவர் சுரேஷ், செயற்பொறியாளர் சம்பத், நகர அமைப்பு பொறியாளர் நேதாஜி மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க.நிர்வாகிகள், கவுன்சிலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
லால்குடி
லால்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை நகராட்சி தலைவர் துறைமாணிக்கம் தொடங்கி வைத்தார். கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் குமார், துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.