மாநகராட்சி பள்ளிக்குள் புகுந்து பேட்டரிகள் திருட்டு
மாநகராட்சி பள்ளிக்குள் புகுந்து பேட்டரிகள் திருட்டு
கோவை
கோவை ராமநாதபுரத்தில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக ரவி என்பவர் உள்ளார். கடந்த 28-ந் தேதி பள்ளி முடிந்ததும் தலைமை ஆசிரியர் ரவி பள்ளியை வழக்கம்போல் பூட்டிவிட்டு சென்றார். இரவு காவலாளி பணியில் இருந்தார். இந்தநிலையில் மறுநாள் காலையில் காவலாளி வந்து பார்த்தபோது பள்ளியின் கணினி ஆய்வக கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக தலைமை ஆசிரியர் ரவிக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தலைமை ஆசிரியர் ரவி உடனே அங்கு விரைந்து சென்றார். அப்போது கணினி ஆய்வகத்துக்குள் சென்று பார்த்தபோது அங்கு இருந்த 6 பழைய பேட்டரிகள் திருட்டுபோய் இருந்தது தெரியவந்தது. மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து திருடிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.