வீட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு


வீட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு
x

நாசரேத் அருகே வீட்டை உடைத்து 5 பவுன் நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் அருகே உள்ள திருவள்ளூர் காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பலூன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சின்னம்மாள் ( வயது 65). இவர் நேற்று காலையில் வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். மதியம் வீடு திரும்பும்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே உள்ள பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பீரோவில் வைத்து இருந்த 5½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. அவர் வெளியே சென்றிருப்பதை அறிந்த மர்ம நபர் வீட்டை உடைத்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்


Next Story