வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு


வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
x

வீட்டின் கதவை உடைத்து திறந்து நகையை திருடிச் சென்றுள்ளனர்

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்ய கல்யாணி (வயது 78). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்ைட பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றார். பின்னர் நேற்று காலை தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும், வீட்டில் இருந்த 5 பவுன் நகை திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

நித்ய கல்யாணியின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் கதவை உடைத்து திறந்து நகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story