மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு


மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு
x

மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருடப்பட்டது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள சட்டமங்கலம் கணபதி சிண்டிகேட் நகர் பகுதியை சேர்ந்தவர் திவாகர் (வயது 35). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து திவாகர் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story