பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு
பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து பணம்-பொருட்கள் திருட்டு போனது
திருச்சி, மே.29-
திருச்சி பொன்னகர் மெயின்ரோட்டில் பல்பொருள் அங்காடி நடத்தி வருபவர் அண்ணாதுரை. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் பல்பொருள் அங்காடியை பூட்டிவிட்டு சென்றனர். இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் கடையை திறக்க வந்தனர். அப்போது, அங்காடி கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்றுபார்த்தபோது, பல்துலக்கும் பிரஷ், வாஷிங் பவுடர் உள்ளிட்ட சில பொருட்கள் மற்றும் கல்லாவில் இருந்த ரூ.2 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. மேலும் அங்காடியின் பின்புறம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் மாயமாகி இருந்தது. இது குறித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு மர்ம நபர் பொருட்களை திருடிய காட்சி பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த நபர் யார்? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.