டீக்கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு


டீக்கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
x

டீக்கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே உள்ள பேயன்குழி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருடைய மகன் தமிழ்ச்செல்வன், அந்த பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் எதிரே டீக்கடை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு தமிழ்ச்செல்வன் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் கடையை திறக்க வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது, அங்கு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை காணவில்லை.யாரோ மர்மநபர் நள்ளிரவில் கடைக்குள் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தமிழ்ச்செல்வன் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story