வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகள் திருட்டு
மணல்மேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணல்மேடு, மே.29-
மணல்மேடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
14 பவுன் நகைகள் திருட்டு
மணல்மேடு அருகே ஆத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 58). இவர் சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தியாகராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.
இதுகுறித்து அவரது உறவினர் ஒருவர், தியாகராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவர் ஆத்தூருக்கு விரைந்து வந்து வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த செயின், ஆரம் உள்பட 14 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தொிய வந்தது.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தியாகராஜன் வீடு பூட்டிக்கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 14 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
----