வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
நரிமணத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நாகப்பட்டினம்
நாகூர்:
நாகூரை அடுத்த நரிமணம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52) .விவசாயி . இவர் நேற்று முன்தினம் இரவு உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்..பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து சுப்பிரமணியன் நாகூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story