வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சியை அடுத்த தாளக்குடி அருகே உள்ள அருண்நகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அமராவதி (வயது 72). கணவன் இறந்ததால் அமராவதி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் உறவினர் வீட்டு திருமண விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அமராவதி வீட்டை பூட்டி விட்டு நேற்று முன்தினம் சென்றார். பின்னர் நேற்று காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒரு பவுன் தங்க சங்கிலி மற்றும் ரூ.20 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து அமராவதி கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story