வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை-பணம் திருட்டு
மணப்பாறை ஐயப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 68). சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் தினமும் மாலையில் மின்விளக்கை போட்டு விட்டு காலையில் நிறுத்தி விடுவார். நேற்று காலை மின் விளக்கை அணைக்க சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அறைகளின் கதவுகள் திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் நாகராஜிக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து நாகராஜ் மணப்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் சுமார் 36 கிராம் எடையுள்ள 6 ஜோடி தங்கத் தோடுகள் மற்றும் 60 ஆயிரம் ரொக்கப்பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
வலைவீச்சு
திருட்டு நடந்த வீட்டில் விரல் ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.