வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டுபோனது.
துறையூர்:
துறையூர் அருகே உள்ள மதுராபுரியை சேர்ந்த ராமசாமியின் மகன் துரைராஜ். இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு, தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு தனது மனைவி சின்னம்மாள், பெரம்பலூரில் உள்ள தனது மகளுடன் கோவிலுக்கு சென்று நேற்று மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு மற்றும் அதைத்தொடர்ந்து உள்ள கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து பீரோவை திறந்து, அதில் இருந்த சங்கிலி, தோடு உள்பட 4 பவுன் நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் துரைராஜ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.