வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு
x

நாகை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகை அருகே மஞ்சக்கொல்லை மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முகமதுகுப்பூதீன் (வயது 65). இவருடைய உறவினர் ரபீக்உசேன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சவுதி அரேபியாவிற்கு சென்று விட்டார். இதனால் அவரது வீட்டை முகமதுகுப்பூதீன் பராமரித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் முகமதுகுப்பூதீன், ரபீக்உசேன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அதைதொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.30 ஆயிரத்தை காணவில்லை. மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து முகமதுகுப்பூதீன் நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story