ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து திருட்டு
அரக்கோணம் அருகே ஊராட்சி மன்ற அலுவலகததின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த வேலூர் பேட்டையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் வேலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், ஏ.சி. என சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story