கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x

ஜெயங்கொண்டத்தில் கோவில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு போனது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வேலாயுத நகரில் மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆப் செய்தனர். பின்னர் சாமி கழுத்தில் அணிந்திருந்த தாலி குண்டு காசு உள்ளிட்ட 2¾ பவுன் நகை மற்றும் 2 உண்டியலில் இருந்த ரூ.7 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அரியலூரில் இருந்து மோப்ப நாய்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிந்து இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story