கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
ராமநத்தம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டிலை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்
ராமநத்தம்,
ராமநத்தம் அருகே வாகையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம்போல் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு, வீட்டுக்கு சென்று விட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, அம்மன் முன்பு வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணிக்கை பணத்துடன் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உண்டியலை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story