வழக்கு பதியாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்:அலங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர்-ஏட்டு பணியிடை நீக்கம்- மதுரை சரக டி.ஐ.ஜி. உத்தரவு


வழக்கு பதியாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்:அலங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர்-ஏட்டு பணியிடை நீக்கம்- மதுரை சரக டி.ஐ.ஜி. உத்தரவு
x

வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற அலங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

மதுரை


வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற அலங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.

புகையிலை விற்பனை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பூதக்குடி லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் அபிேஷக்குமார் (வயது 23). இவர் வாகைக்குளம் பகுதியில் கடை நடத்தி வருகிறார். இந்தநிலையில், இவரது கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அலங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஏட்டு சுரேந்திரன் ஆகியோர் சென்று சோதனை செய்தனர். அப்போது, அங்கு 15 பாக்கெட்டுகள் அடங்கிய 2 புகையிலை பண்டல்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனை போலீசார் கைப்பற்றினர்.

இதகுறித்து வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க, அபிஷேக்குமாரிடம், ரூ.10 ஆயிரம் லஞ்சமாக பெற்றுள்ளனர். இதுகுறித்த தகவல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கவனத்துக்கு சென்றது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர்கள் லஞ்சம் பெற்றது உண்மை என தெரியவந்தது.

பணியிடை நீக்கம்

அதன்பின்னர் அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னிக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. பொன்னி உத்தரவிட்டார்.

இதுபோன்று காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொள்ளும் போலீசார் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரித்துள்ளார்.


Next Story