செங்கல் சூளை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
விக்கிரமசிங்கபுரம் அருகே செங்கல் சூளை உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த செல்வம் மகன் தவசிங் ராஜா (வயது 26). இவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார். மேலும் புகைப்பட கலைஞராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். தவசிங் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தவசிங் ராஜா தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story