செங்கல் சூளை உரிமையாளர் சாவு


செங்கல் சூளை உரிமையாளர் சாவு
x
தினத்தந்தி 27 Jan 2023 1:41 AM IST (Updated: 27 Jan 2023 3:54 PM IST)
t-max-icont-min-icon

செங்கல் சூளை உரிமையாளர் சாவு

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் செங்கல் சூளை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

மோட்டார்ைசக்கிள்கள் மோதல்

கபிஸ்தலம் அருகே உள்ள ராமானுஜபுரம் படுகை பகுதியை சோந்த சாமிநாதன் மகன் வெங்கடேசன்(வயது39). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரும், ராமானுஜபுரம் மந்தகரை தெரு பகுதியை சேர்ந்த தங்கராஜன் மகன் வெங்கட்ராமன்(33) என்பவரும் கடந்த 21-ந்தேதி புத்தூரிலிருந்து கபிஸ்தலத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கபிஸ்தலத்திலிருந்து திருவையாறுக்கு ராமானுஜபுரம் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்(45), அவரது மனைவி ஆனந்தி ஆகிய 2 பேரும் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெங்கடேசன் மோட்டார்சைக்கிளும், சுப்பிரமணியன் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

செங்கல் உரிமையாளர் சாவு

இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், வெங்கட்ராமன் ஆகியோரை உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாமாக இறந்தார். வெங்கட்ராமனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுப்ரமணியன் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story