லாரி மோதி கொத்தனார் பலி
லாரி மோதி கொத்தனார் பலி
திருவாரூரில் லாரி மோதி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
கொத்தனார்
திருவாரூரை அடுத்த இலவங்காா்குடியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 72). கொத்தனார். சம்பவத்தன்று இவர் வேலையை முடித்து விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். கும்பகோணம்-திருவாரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே சென்ற போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது மோதியது.
விசாரணை
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.