வேன் மோதி கொத்தனார் பலி

திருக்கடையூர் அருகே வேன் மோதி கொத்தனார் பலி
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் சாத்தனூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரஜினி (வயது 42). கொத்தனார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருக்கடையூர் பகுதியில் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார். கீழ் மாத்தூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த ஒரு தனியார் பள்ளி மினிவேன், ரஜினி ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் (பொறுப்பு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கடையூர் அபிஷேக கட்டளை கிராமத்தை சேர்ந்த டிரைவர் உமாரமணன் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.