திருமணம் நடைபெற இருந்த நிலையில்மணப்பெண் மாயமானதால் பரபரப்பு

அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த 20 வயது இளம்பெண் டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கும் ஒரு வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. தர்மபுரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இவர்களுடைய திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மணப்பெண் வீட்டில் இருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே மணப்பெண் மாயமானதால் நேற்று நடைபெற இருந்த திருமணம் நின்றது. இதனால் மணமகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மணப்பெண் மாயமானதால் திருமணம் நின்றதாக திருமணம் நடைபெற இருந்த இடத்தில் பேனர் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






